ஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்… வருகிறது புதிய நடைமுறைகள்

 

ஹெல்த் மற்றும் வாகன இன்ஷூரன்ஸில் மாறுதல்… வருகிறது புதிய நடைமுறைகள்

மருத்துவம் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டில் மாறுதல்களைக் கொண்டுவர காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மருத்துவம் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டில் மாறுதல்களைக் கொண்டுவர காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

insurance

தற்போது வாகனங்களுக்கு அதன் வயது, மாடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பீடு ப்ரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் மாறுதல் கொண்டு வர வேண்டும், பயணம் செய்த தூரத்தை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு வந்தது. இதன் அடிப்படையில் இந்த புதிய ஆலோசனைகளை ஏற்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கியது. இவற்றில் 37 ஆலோசனைகளை செயல்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

traffic

இதில் வாகனத்தின் வயது அடிப்படையில் பாலிசி வழங்குவதற்கு பதில் பயண தூரத்தை கணக்கிடுவது, மருத்துவக் காப்பீட்டில் வயது, பாலினம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொள்வதுடன் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு படிவது உள்ளிட்டவை அடிப்படையில் பாலிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

car

சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும், இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் நடைமுறை செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல் உள்ளிட்டவையைப் பொருத்து இந்த திட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.