ஹெலிகாப்டரில் புகுந்தவீட்டுக்கு வந்த பெண்; – மகளின் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய தந்தை!

ஹெலிகாப்டரில் புகுந்தவீட்டுக்கு வந்த பெண்; – மகளின் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய தந்தை!

ராஜஸ்தான் மாநிலத்தில், மாமியார் வீட்டுக்கு மணமகள் ஒருவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் முடிந்து மணப்பெண் புகுந்த வீட்டுக்கு செல்லும்போது பெண்ணைப் பெற்றவர்கள் கண்ணீரோடு வழி அனுப்பி வைப்பதை பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானில் ஒரு தந்தை மிகவும் வித்தியாசமாக தன்னுடைய மகளை மாப்பிளை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

helicopter

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருடைய மகள் ரீனாவுக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இதை மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய மகேந்திர சிங்… அடுத்து தன்னுடைய மகளை மணமகன் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. 
இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய மகளின் திருமணம் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன். இதனால், திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு ஹெலிகாப்டரின் என்னுடைய மகளை அனுப்ப வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்டேன். திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய யோசனையை குடும்பத்தினரிடம் கூறினேன். அதன்படி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து என்னுடைய மகளை அனுப்பிவைத்தேன்” என்று கூறியுள்ளார் அந்த பாசக்கார தந்தை மகேந்திர சிங்.

married couple

ஹெலிகாப்டர் வந்து இறங்க ஏற்கனவே அந்த கிராமத்தில் ஹெலிபேடும் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கும்போது அதை காண ஏராளமான மக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய திண்டாட்டமாகிவிட்டதாம். கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது மிகப்பெரிய திருவிழா நடந்தது போல இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.