ஹெச்.ராஜாவுக்கு நிரந்தர தடையா? சுந்தர் பிச்சை அதிரடி!

 

ஹெச்.ராஜாவுக்கு நிரந்தர தடையா? சுந்தர் பிச்சை அதிரடி!

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான யூ ட்யூபில் இருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வெறுப்புணர்வை ஊட்டும் வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப உதவியுடன் இப்பணி நடந்து வருவதாகவும் சுந்தர் பிச்சை கூறினார்.

சமூக பொறுப்புணர்வுடன் கூடிய சமூக வலைதளங்களை முன்னெடுக்கும்விதமாக, வெறுப்புணர்வை தூண்டி ஊறு விளைவிக்கும் ஆபத்தான பதிவுகளை யூ டியூப் இணையத்திலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Youtube Harmful Content

வாஷிங்டனில் மாநாடு ஒன்றில் பேசிய சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான யூ ட்யூபில் இருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வெறுப்புணர்வை ஊட்டும் வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப உதவியுடன் இப்பணி நடந்து வருவதாகவும் சுந்தர் பிச்சை கூறினார்.

Sundar Pichai

மதம், மொழி, இனம், நாடு என்ற பிரிவுகளில், வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் அதிகளவில் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் அவற்றை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேப்போல், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட முக்கிய சமூகவலைதளங்களும் முடிவெடுக்கும்பட்சத்தில் ஹெச்.ராஜா போன்று வெறுப்பை உமிழும் ஆசாமிகளின் கணக்குகள் நிரந்தரமாக மூடப்படும் என்பதில் ஐயமில்லை!