ஹெச்.பி நிறுவனத்தின் இரண்டு புதிய பிரீமியம் மாடல் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

 

ஹெச்.பி நிறுவனத்தின் இரண்டு புதிய பிரீமியம் மாடல் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.பி நிறுவனத்தின் இரண்டு புதிய பிரீமியம் மாடல் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: ஹெச்.பி நிறுவனத்தின் இரண்டு புதிய பிரீமியம் மாடல் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.பி நிறுவனம் தனது இரண்டு புதிய கன்வெர்டிபிள் லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவை ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ மாடல் லேப்டாப்கள் ஆகும். இதில் ஹெச்.பி ஸ்பெக்டர் X360 மாடலானது உலகின் முதல் AMOLED டிஸ்பிளே கொண்ட லேப்டாப் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதன் விலையை பொறுத்தவரை ரூ.1,29,990 முதல் அதிகபட்சமாக ரூ.1,69,990 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் டார்க் ஆஷ் கிரே மற்றும் புளு போசிடோன் நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹெச்.பி. ஸ்பெக்டர் ஃபோலியோ லேப்டாப் காக்னாக் பிரவுன் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,99,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.பி ஸ்பெக்டர் X360 லேப்டாப் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 13.3 இன்ச் FHD டிஸ்பிளே / 13.3 இன்த் 4K டிஸ்பிளே, 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்கள், இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620, 8 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வகைகள், 256 ஜிபி / 512 ஜிபி / 1000 ஜிபி மெமரி வகைகள், விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம், ஹெச்.பி வைடு விஷன்  FHD IR கேமரா, ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 5, 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1, 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ, 4-செல், 61 Wh Li-ion பாலிமர் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதேபோல ஹெச்.பி ஸ்பெக்டர் ஃபோலியோ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 13.3 இன்ச் FHD டிஸ்பிளே, மல்டி டச் எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ் டிஸ்பிளே, 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i7-8500Y பிராசஸர், இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 615, 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம், ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா, ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 4.2, 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1, 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ, 6-செல், 54.28 Wh Li-ion பாலிமர் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.