ஹூ இஸ் த ப்ளாக் ஷீப் – ரஜினி பற்றிய கட்டுரைக்கு முரசொலி விளக்கம்!

 

ஹூ இஸ் த ப்ளாக் ஷீப் – ரஜினி பற்றிய கட்டுரைக்கு முரசொலி விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த்  குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து முரசொலி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்  குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து முரசொலி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி களப்பணி செய்வார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்.  ஆனால், ‘ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் சாதித்து விட முடியாது. மக்களின் ஆதரவு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. 30, 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிடாது. தமிழகத்தில் புது அரசியலை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ என்ற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

rajini

இதையடுத்து , திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்  ஒரு முழு பக்கத்திற்கு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்து ‘கேள்வி-பதில்’ வடிவில் கட்டுரை வெளியாகியது. இது பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து மீண்டும் தன் ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், ‘நாம் எந்தப் பாதையில் போனாலும் அது நியாயமானதாக இருக்க வேண்டும். நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருந்த உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி. என்னையும் ரசிகர்களையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று  மறைமுகமாக திமுகவை சாடியிருந்தார்.

murasoli

இந்நிலையில் முரசொலியில் வெளியான கட்டுரை குறித்து அதன் ஆசிரியர் விளக்கமளித்துள்ளார். இன்றைய முரசொலி நாளிதழில் வெளியாகியிருக்கும் அந்த விளக்கத்தில் ரஜினி குறித்த கட்டுரை சில நல்ல மனதைப் புண்படுத்துவது போல் உள்ளதென்று தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், இனி அத்தகைய செய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.