ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

 

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: 125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ்.6 எஞ்சின்கள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வருகிற ஏப்ரல்.1-ஆம் தேதி முதல் விற்கப்படும். அதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் பி.எஸ்.6 மாடலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எவ்வித காஸ்மெடிக் அல்லது வடிவமைப்பு மாற்றங்களும் இந்த ஸ்கூட்டரில் செய்யப்படவில்லை.

மேலும் வாகனத்தின் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லர் கேப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன்படி அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 67,950 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 70,150 மற்றும் அலாய் வீல், டிஸ்க் பிரேக் மற்றும் பிரத்யேக நிறம் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 70,650 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.