ஹீரோ டெஸ்டினி 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

 

ஹீரோ டெஸ்டினி 125சிசி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: 125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ்.6 எஞ்சின்கள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வருகிற ஏப்ரல்.1-ஆம் தேதி முதல் விற்கப்படும். அதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் பி.எஸ்.6 மாடலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125 சிசி என்ஜின் கொண்ட ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.64,310 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ttn

அந்த வகையில் இது இந்தியாவின் விலை குறைந்த 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. எல்.எக்ஸ் மற்றும் வி.எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த டெஸ்டினி ஸ்கூட்டர் கிடைக்கிறது. வி.எக்ஸ் வேரியண்ட் விலை ரூ.66,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டெஸ்டினி பி.எஸ்.6 ஸ்கூட்டர் முந்தைய பி.எஸ்.4 மாடலை விட 11 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும்.