ஹிந்தி “மெகா ஸ்டார்” அமிதாப் பச்சனுக்கு  “தாதாசாகேப் பால்கே” விருது -ஜனாதிபதி கையால்  கொடுத்து  கவுரவிக்கப்படுவார்..

 

ஹிந்தி “மெகா ஸ்டார்” அமிதாப் பச்சனுக்கு  “தாதாசாகேப் பால்கே” விருது -ஜனாதிபதி கையால்  கொடுத்து  கவுரவிக்கப்படுவார்..

அமிதாப் பச்சன் டிசம்பர் 29 ஆம் தேதி “தாதாசாகேப் பால்கே” விருது கொடுத்து  கவுரவிக்கப்படுவார்  என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார் .

அமிதாப் பச்சன் டிசம்பர் 29 ஆம் தேதி “தாதாசாகேப் பால்கே” விருது கொடுத்து  கவுரவிக்கப்படுவார்  என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார் .

prakash

உடல்நலக்குறைவு காரணமாக திங்களன்று நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவைத் தவிர்த்த மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு  டிசம்பர் 29 ஆம் தேதி  தாதாசாகேப் பால்கே விருது  வழங்கப்படும்  என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்

ram

. ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைத்து  விருந்தினருக்கும் ஒரு உயர் தேநீர் விருந்து வழங்குவார் என்றும் , அங்கு பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிகப்பெரிய விருது  வழங்கப்படும் என்று ஜவடேகர் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கூறினார்.

bachan

77 வயதான அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை,  தான்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள கூடாது  என்றும், பயணத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் தனக்கு  அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்திய சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் தண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது 1969 ஆம் ஆண்டு முதல் தரப்படுகிறது ,அதாவது  பச்சன் இந்தி திரையுலகில் “சாத் இந்துஸ்தானி” மூலம் அறிமுகமான ஆண்டு அது .
இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு மிக உயர்ந்த கவுரவமாகக் கருதப்படும் இந்த விருது, ஸ்வர்ணா கமல் (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ .10,00,000 ரொக்கப் பணத்தை  உள்ளடக்கியது. இது 2017 ஆம் ஆண்டில் மறைந்த நடிகர் வினோத் கண்ணாவுக்கு வழங்கப்பட்டது.