ஹிந்தியை பொது மொழியாக ஏற்றுக் கொள்ள இயலாது – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

 

ஹிந்தியை பொது மொழியாக ஏற்றுக் கொள்ள இயலாது – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

“தமிழ் எங்களது தாய் மொழி. அதனை ஒருபோதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆங்கிலம் பொதுவான மொழியாக இருக்கும் பட்சத்தில் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ள இயலாது. அப்படி திணிப்பதற்கு முயற்சித்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்ததை விட மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்”

ஹிந்தியை பொது மொழியாக ஏற்றுக் கொள்ள இயலாது, பொது மொழி என்றால் அது ஆங்கிலம் தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்த தினக் கொண்டாடத்தின் போது நாட்டின் பொது மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இதற்கு பல எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் இந்தி திணிப்புக் குறித்து  கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர்
“தமிழ் எங்களது தாய் மொழி. அதனை ஒருபோதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆங்கிலம் பொதுவான மொழியாக இருக்கும் பட்சத்தில் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ள இயலாது. அப்படி திணிப்பதற்கு முயற்சித்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்ததை விட மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார். 

மேலும் பொதுத்தேர்வு குறித்து கேட்டபொழுது “நமது கல்வித் துறையில் ஒழுங்கான சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். மத்திய அரசு அண்மையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவை வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு மூன்று ஆண்டுகள் வரை தேர்ச்சி பெறவில்லை என்றாலும் மாணவர்கள் அடுத்து ஆண்டு தனது படிப்பை பயிலும் வகையில் விலக்கு அளித்து உத்திரவிட்டிருந்தது. 

முன்னதாக இந்தி திணிப்புக் குறித்து  நடிகர் ரஜினி  “ஒரு நாட்டிற்கு பொதுவான மொழி ஒன்று இருப்பது நாட்டை முன்னுக்கு எடுத்துச் செல்லும். எனினும் அது நமது நாட்டில் கொண்டுவர சாத்தியமில்லை. ஆகவே ஹிந்தி மொழியை எந்த விதத்திலும் திணிக்கக் கூடாது” என்று கருத்துத் தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரங்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது