ஹிந்தியை திணித்தால் எந்த மாநிலமும் அதை ஏற்று கொள்ளாது: ரஜினி காந்த் பேட்டி

 

ஹிந்தியை திணித்தால் எந்த மாநிலமும் அதை ஏற்று கொள்ளாது: ரஜினி காந்த் பேட்டி

துர்தஷ்டவசமாக இந்தியாவில் ஒரே மொழி என்ற கொள்கையை செயல் படுத்த முடியாது. இந்தியை திணித்தால் தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளாது

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்றும் இந்தியாவின் மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

Rajini kanth

இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமித் ஷாவின் கருத்து பற்றி செய்தியாளர்கள் ரஜினி காந்திடம் கேட்டனர். அதற்கு அவர், ” நாட்டை அடையாள படுத்த ஒரு மொழி இருக்க வேண்டும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான். ஆனால் துர்தஷ்டவசமாக இந்தியாவில் ஒரே மொழி என்ற கொள்கையை செயல் படுத்த முடியாது. இந்தியை திணித்தால் தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.