ஹிந்திக்கு செல்கிறது காஞ்சனா – ஹீரோ யார் தெரியுமா ?

 

ஹிந்திக்கு செல்கிறது காஞ்சனா – ஹீரோ யார் தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவரை பேய் படங்கள் என்றால் பீதியைக் கிளப்பும் திகில் காட்சிகள் மட்டும் தான் இடம் பெறும் என்ற நிலையை மாற்றி இந்தப் படத்தில் புதிய டிராக்கை ராகவா லாரன்ஸ் உருவாக்கினார்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவரை பேய் படங்கள் என்றால் பீதியைக் கிளப்பும் திகில் காட்சிகள் மட்டும் தான் இடம் பெறும் என்ற நிலையை மாற்றி இந்தப் படத்தில் புதிய டிராக்கை ராகவா லாரன்ஸ் உருவாக்கினார்.

இதனால் பேய் படம் என்றபோதும் காமெடி கலந்து உருவாக்கப்பட்டதால் குழந்தைகளுன் குடும்பம் குடும்பமாக மக்கள் ரசித்தனர். இதுவே ராகவாவின் புதிய சக்ஸஸ் ஃபார்முலா ஆனது.தொடர்ந்து இதே ஜானரில் பல படங்கள் வெளியாகின.

காஞ்சனா 1ஐ அடுத்து வந்த இரண்டாவது பாகமும் மெகா ஹிட்டானது. இதனால் தற்போது ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவதற்காக காஞ்சனா 3  உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காஞ்சனா ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்சய்குமார் நடிக்கவிருக்கிறார். சரத்குமார் வேடத்துக்கு பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

படத்தை ராகவா லாரன்ஸே ஹிந்தியில் இயக்கவிருக்கிறார்கள். இதில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.