‘ஹிட் மேன்’ ரோகித் ஷர்மாவை அச்சுறுத்திய இரண்டு பந்துவீச்சாளர்கள்

 

‘ஹிட் மேன்’ ரோகித் ஷர்மாவை அச்சுறுத்திய இரண்டு பந்துவீச்சாளர்கள்

ரோகித் ஷர்மாவை அச்சுறுத்திய இரண்டு பந்துவீச்சாளர்கள் பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்.

மும்பை: ரோகித் ஷர்மாவை அச்சுறுத்திய இரண்டு பந்துவீச்சாளர்கள் பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், ஹிட் மேன் என்ற புகழுக்கு சொந்தக்காரரான ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இரண்டு பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்டதாக கூறியுள்ளார். முகமது ஷமி உடனான இன்ஸ்டாகிராம் லைவ் செஷன்போது இதை அவர் கூறினார்.

அதாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ மற்றும் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இருவரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமங்களை சந்தித்ததாக ரோகித் ஷர்மா வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியுடனான இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது ரோஹித் சர்மா இந்த கருத்துக்களை வெளியிட்டார். தற்போது விளையாடும் வீரர்களில் ரபாடா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்ததாக கூறினார். அப்போதுதான் பிரட் லீ மற்றும் டேல் ஸ்டெய்னை எதிர்கொள்வதில் தனக்கு சிரமம் இருப்பதாக ரோஹித் தெரிவித்தார்.

dale styen

நான் விளையாட வந்தபோது, உலகின் அதிவேக பந்து வீச்சாளர் பிரட் லீ ஆவார். எனது முதல் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள அயர்லாந்து சென்றேன். டேல் ஸ்டெய்னும் அப்போது அதிவேகமாக பந்து வீசினார். நான் விளையாடத் தொடங்கியபோது, லீ மற்றும் ஸ்டெய்னை நான் மிகவும் விரும்பினேன். அவர்களை எதிர்கொள்வதில் எனக்கு சிரமங்கள் இருந்தன என்று ரோகித் இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது ஷமியிடம் கூறினார். மேலும் தற்போதைய வீரர்களில் ரபாடா ஒரு நல்ல பந்து வீச்சாளர். எனக்கு ஜோஷ் ஹேசல்வுட் மிகவும் பிடிக்கும். அவர் மிகுந்த ஒழுக்கத்துடன் பந்து வீசுகிறார்என்று ரோகித் கூறினார்.