ஹாலிவுட் படம், புத்தக வாசிப்பு என ஜாலியாக பொழுதை போக்கும் காவலில் இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்….

 

ஹாலிவுட் படம், புத்தக வாசிப்பு என ஜாலியாக பொழுதை போக்கும் காவலில் இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்….

வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் ஜிம் பயிற்சி, ஹாலிவுட் படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது என தங்களது நேரத்தை ஜாலியாக செலவிட்டு வருகின்றனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. அதற்கு முந்தைய நாள் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை அதிரடியாக வீட்டு காவலில் வைத்தது. தற்போது வரை அவர்கள் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளனர். 

காஷ்மீர்

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் முதலில் ஸ்ரீநகர் குப்கர் சாலையில் உள்ள ஹரி நிவாஸ் பேலஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் பிரச்சினை ஏற்பட்டதால் மெகாபூபா முப்தி சாஷ்மே ஷாஹியில் ஜே.கே.டி.டி.சி.க்கு சொந்தமான கட்டிடத்தில் காவலில் வைக்கப்பட்டார். 

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் தங்களது நேரத்தை ஜிம்மில் பயிற்சி செய்வது, ஹாலிவுட் படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என ஜாலியாக நிம்மதியாக செலவிட்டு வருகின்றனர். ஹரி நிவாஸ் பேலஸில் உள்ள ஓமர் அப்துல்லா அங்குள்ள ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். அதிகாரிகள் வழங்கிய ஹாலிவுட் பட வீடியோ கேசட்டுகளை போட்டு பார்த்து வருகிறார். மேலும், 9 ஏக்கரில் பரப்பில் அமைந்துள்ள அந்த பங்களாவில் காலையில் வாக்கிங் செல்ல ஓமர் அப்துல்லாவுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். மேலும், சில நேரங்களில் அவர் நோட்டில் ஏதோ எழுதி கொண்டு  இருக்கிறார்.

மெகபூபா முப்தி

சாஷ்மே ஷாஹியில் ஜே.கே.டி.டி.சி.க்கு சொந்தமான கட்டிடத்தில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி  தனது  நேரத்தை புத்தகங்களை படிப்பதில் செலவிட்டு வருகிறார். ஸ்ரீநகர் குப்கர் சாலையில் உள்ள  காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லாவின் வீட்டுக்கு வெளியே எப்போதும் போலீஸ் வாகனங்கள் காணப்படுகின்றன. அவரும் வீட்டுக் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளார்.