ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

 

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.

சென்னை: ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

2point0

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ’2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

ஷங்கரின் ‘2.0’ திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 11வது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஐக்கிய அமீரக நாடுகளின் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ஹாலிவுட்டினரையே அதிர வைத்துள்ளது.

’2.0’ திரைப்படம் ரிலீசான சமயத்தில், ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்த ‘க்ரீட் 2’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வந்தது. ‘2.0’ ரிலீசுக்குப் பின், சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட் 2’ திரைப்படத்தின் வசூல் குறைந்திருப்பதாகவும், ‘க்ரீட் 2’ படத்தை காட்டிலும் ’2.0’ படத்திற்கு உலகளவில் கூடுதல் ஸ்க்ரீன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகளவில் வசூலில் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வரும் 2.0 திரைப்படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவின் தாக்கத்தை உலக சினிமாவிற்கு உணர்த்தியுள்ளது.