ஹார்மோன் பிரச்னையா? பெண்களே ரெட் ஒயின் குடிங்க..!

 

ஹார்மோன் பிரச்னையா? பெண்களே ரெட் ஒயின் குடிங்க..!

பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம்.

சென்னை: பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம்.

அதன் பக்க விளைவுகளாக ஏற்படும் முக பருக்கள், உடல் எடை அதிகரிப்பது உள்ளிட்ட உபாதைகளை எளிதில் குணமாக்க தினமும் குறிப்பிட்ட அளவிற்கு ரெட் ஒயின் குடிக்கலாம். ரெட் ஒயின் பெண்களின் ஹார்மொன் பிரச்னைகளை சீராக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆரய்ச்சி குழு நடத்திய ஆய்வில், ரெட் ஒயின், திராட்சை பழம், சாக்லெட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னைகள் இன்றி இயல்பாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

redwine

ரெட் ஒயினில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள் ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக கூறப்படுகிறது. மேலும், இது சருமத்தை பொலிவுடன் வைக்கவும், முதுமையை தடுக்கவும் உதவுகிறது.

ரெட் ஒயினில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இது டைப் 2 நீரிழிவு ஏற்படுவதைத் தடுப்பதோடுஎலும்புகள் வலிமையடையும். பெண்கள் ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால்அது மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். மேலும் ரெட் ஒயினில் க்யூயர்சிடின் இருப்பதால்அது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.