ஹார்ட் பிராப்ளம் இருப்பவர்கள் இந்த செய்தியை தவிர்ப்பது நல்லது-மகாராஷ்ட்ராவில் இன்னொரு விநோத சம்பவம்!

ஹார்ட் பிராப்ளம் இருப்பவர்கள் இந்த செய்தியை தவிர்ப்பது நல்லது-மகாராஷ்ட்ராவில் இன்னொரு விநோத சம்பவம்!

கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் எல்லா தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருந்தது மகாராஷ்ட்ரா அரசியல் தான்.இரவில் ஒரு நிலவரம்,காலையில் தூங்கி எழுந்தால் புதுக்கலவரம்.யார் காலை யார் வாரினார்கள்.யாருடன் யார் கை கோர்ப்பார்கள்.அடுத்த முதல்வர் யார்,அவர் எத்தனை நாள் தாங்குவார் என்று எழுதியும்,பேசியும் சோர்ந்து விட்டன.

maharastra

முதல் நாள் சானக்கியனாக சொல்லப் பட்டவருக்கு அடுத்தநாள் கோமாளிப் பட்டம் .முதல்நாள் துரோகி என்று அழைக்கப்பட்டவர் மறுநாள் ஓடிவந்து சேர்ந்து கொள்கிறார்.இப்படி கடந்த சில நாட்களாக நடந்த களேபரத்தில் உத்தவ் தாக்கரே 48 மணி நேரமாகத் தூங்கவே இல்லையாம்.இந்த சோதனை, பவார்கள்,பட்னாவிஸ்,அமித்.ஷாவை மட்டுமல்ல ஜாகிர் சையத் என்கிற ஆங்கிலப் பேராசிரியரையும் மிகவும் பாதித்து இருக்க வேண்டும். 

மகாராஷ்ட்ர மாநிலம் காட்சாண்டூர் என்கிற நகரத்தில் இருக்கும் கல்லூரியில் ஜாகிர் சையத் ஆங்கிலம் கற்பிக்கிறார்.இவர் நேற்று தனது கல்லூரி பிரின்ஸ்பாலுக்கு ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதி இருக்கிறார். அதைப்படித்த பிரின்ஸ்பாலும் நடப்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டாராம்!

letter

அந்தக் கடிதத்தில் ஜாகிர் சையத் உலக ப்ள்ளிகள் கல்லூரிகள் வரலாற்றில் முதன் முறையாக தனக்கு.விடுப்பு எடுக்க வேண்டிவந்ததற்கான காரணமாக சுட்டிக்காட்டி இருந்தது மகாராஷ்ட்ர அரசியல் திருப்பங்களைத்தான்.இந்த அதிரடி சம்பவங்களைப் படித்தும்,பார்த்தும் என் உடல் நலிவடைந்து விட்டது,ஆகவே எனக்கு விடுமுறை அளியுங்கள் என்று எழுதி இருந்தாராம் அந்தப் பேராசிரியர்.மராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த விடுமுறை விண்ணப்பம் இப்போது வலைத்தளத்தில் பரபரப்பாக பகிறப்படுகிறதாம்.