ஹாயாக அமர்ந்திருந்த ஹெச்.ராஜா.. எகிறிய வழக்கறிஞர்கள்: நீதிமன்றத்தில் சம்பவம்

 

ஹாயாக அமர்ந்திருந்த ஹெச்.ராஜா.. எகிறிய வழக்கறிஞர்கள்: நீதிமன்றத்தில் சம்பவம்

நீதிமன்ற அறைக்குள் அமர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை வழக்கறிஞர்கள் அரை மணி நேரம் நிக்க வைத்துள்ளனர்.

சென்னை: நீதிமன்ற அறைக்குள் அமர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை வழக்கறிஞர்கள் அரை மணி நேரம் நிக்க வைத்துள்ளனர்.

நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாகப் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்காக நேற்று காலை 10 மணியளவில் ஹெச்.ராஜா வந்துள்ளார்.

நேராக நீதிமன்ற அறைக்குச் சென்ற அவர், நீதிபதி வராததால் வக்கீல்கள் அமரும் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சில வழக்கறிஞர்கள், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஒருவர் எப்படி வக்கீல்கள் அமரும் இருக்கையில் அமரலாம்” என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ஒரு படி மேலாக, சில வக்கீல்கள் ஹெச்.ராஜாவை நேரடியாகவே திட்டியுள்ளனர்.

இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, ஹெச்.ராஜாவின் வழக்கறிஞர்கள் அவரை இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கேட்டுள்ளனர். அதன்பின் 10.50 மணிக்கு நீதிபதி வரும் வரை அந்த இடத்தில் ஹெச்.ராஜா நின்றபடியே இருந்துள்ளார்.