ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது?

 

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது?

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதன்முறையாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் / 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 1,399 யுவான்கள் (தோராயமாக ரூ.14,400) ஆகும். 6ஜிபி ரேம் / 64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 1,699 யுவான்கள் (தோராயமாக ரூ.17,500), 6ஜிபி ரேம் / 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 1,899 யுவான்கள் (தோராயமாக ரூ.19,500) ஆகும். கிரேடியன்ட் ப்ளூ, கிரேடியன்ட் ரெட், லிலி வாலி வொயிட், மேஜிக் நைட் பிளாக் ஆகிய நான்கு கலர் வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்நிலையில், ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இந்த மாதம் (ஜன,2019) வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, டுயல் ரியர் கேமரா (13 எம்.பி + 2 எம்.பி, எல்.இ.டி ஃபிளாஷ்) மற்றும் 24 எம்.பி செல்பி கேமரா, கிரின் 710 பிராசஸர், விரல்ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, 3400 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், வைஃபை, டுயல் சிம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.