ஹானர் ஸ்போர்ட் இயர்போன் ஜன.30-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது

 

ஹானர் ஸ்போர்ட் இயர்போன் ஜன.30-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது

ஹானர் நிறுவனத்தின் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ரோ இயர்போன்கள் ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது.

டெல்லி: ஹானர் நிறுவனத்தின் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ரோ இயர்போன்கள் ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது.

ஹானர் நிறுவனத்தின் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ரோ இயர்போன்கள் ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது. இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் இந்த சாதனத்தை வாங்க முடியும். ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இவ்விரு புதிய இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஸ்போர்ட் இயர்போன் விலை ரூ.1999 எனவும், ஸ்போர்ட் ப்ரோ இயர்போன் விலை ரூ.3999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் ஸ்போர்ட் அம்சங்கள்:

11எம்.எம் டைனமிக் ஸ்பீக்கர், வலுவான பேஸ் மற்றும் சவுண்ட் குவாலிட்டி, புளூடூத் 4.1, 137 எம்.ஏ.எச் பேட்டரி, 11 மணி நேரம் பிளே டைம், வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப், வியர்வையில் நனைந்தாலும் பாதிப்பில்லாத அம்சம், மூன்று பட்டன் கண்ட்ரோல், 5 கிராம் எடை ஆகியவை ஹானர் ஸ்போர்ட் இயர்போனின் சிறப்பம்சங்கள் ஆகும். பிளாக், ப்ளூ, ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

ஹானர் ஸ்போர்ட் ப்ரோ அம்சங்கள்:

ஹானர் ஸ்போர்ட் இயர்போனை காட்டிலும் இந்த ஸ்போர்ட் ப்ரோ இயர்போனில் கூடுதல் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. 18 மணி நேரம் பிளே டைம், உடனடியாக மற்ற சாதனங்களுடன் கனெக்ட் ஆவது, ஃபாஸ்ட் சார்ஜிங், மெட்டல் நெக் கேபிள், 120 எம்.ஏ.எச் 3சி லித்தியம் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட் வசதியும் உள்ளது. பேண்டம் ரெட் மற்றும் பேண்டம் பர்பிள் ஆகிய நிறங்களில் இந்த மாடல் இயர்போன் கிடைக்கும்.