ஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்

ஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்

ஹாங்காங் நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பாதுகாப்பான ரயில் பயணங்கள் கொண்ட நாடுகளில் ஹாங்காங் நாடு முன்னிலை வகிக்கிறது. ரயில் நிலையங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதிலும் தண்டவாளங்களை சீரான இடைவெளியில் பராமரித்து வருவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரயில் விபத்துகள் அந்நாட்டில் அரிதான ஒன்றாக இருந்தது.

ஹாங்காங் நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

train

உலகின் பாதுகாப்பான ரயில் பயணங்கள் கொண்ட நாடுகளில் ஹாங்காங் நாடு முன்னிலை வகிக்கிறது. ரயில் நிலையங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதிலும் தண்டவாளங்களை சீரான இடைவெளியில் பராமரித்து வருவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரயில் விபத்துகள் அந்நாட்டில் அரிதான ஒன்றாக இருந்தது.

அண்மையில் ஹாங்காங் நாட்டில் மிக பெரிய குற்றங்களை செய்பவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு தண்டனைகள் வழங்குவதற்கான சிறப்பு சட்ட திட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதற்கு நாட்டில் மூலை முடுக்கெங்கும் எதிர்ப்பலைகள் வலுத்த வண்ணம் உள்ளன. 

இந்த போராட்டங்களினால் ஹாங்காங் அரசால் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 

train

ரயில் தண்டவாளங்களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக அவ்வப்போது ரயில் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

நேற்று கவ்லூன் அருகே உள்ள ஹங் ஹோம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து பேசி ரயில்வே துறை தலைவர், விபத்தில் காயமடைந்தவர்களிடமும், பயணிகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்க சீரான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தடத்தில் ஏற்பட்ட தடைகள் நீக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.