ஹவுசிங் போர்டு பொண்ணு தாங்க நான்: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!

 

ஹவுசிங் போர்டு பொண்ணு தாங்க நான்: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!

நானும் ஹவுசிங் போர்டில் வளர்ந்த பெண் தான் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வடசென்னை அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

சென்னை: நானும் ஹவுசிங் போர்டில் வளர்ந்த பெண் தான் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வடசென்னை அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ’வடசென்னை’ பகுதி மக்களின் எதார்த்த வாழ்க்கை மற்றும் அவர்களை சுற்றி நடக்கும் ரவுடிசத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

vadachennai

ஏற்கனவே, ‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஐடியா இருந்ததால் தனக்கு ’பத்மா’ கதாபாத்திரத்தில் நடிப்பதில் சிரமம் இல்லை. இருப்பினும், லிப்-லாக் சீன், வசனங்களில் கெட்ட வார்த்தை பேசும்போதெல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

வடசென்னை படத்தில் அதன் கதைக்கு ஏற்ப படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசியிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள கெட்ட வார்த்தைகள் எதுவும் காதை மூடிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என படம் குறித்து விமர்சனங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

vadachennai

மேலும், ஹவுசிங் போர்டில் பிறந்த வளர்ந்த ஒரு சாதாரண பெண் தான், சின்ன வயதில் நடிகர் சிம்பு வீட்டு பக்கமாக செல்லும்போது அவரை பார்ப்போம், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு அப்பவே ஓவர் சீன் போடுவார் என்றார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இன்னும் அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார்.