ஹலோ விக்ரம், திஸ் இஸ் நாசா, நாங்க பேசுறது கேக்குதா? இஸ்ரோவுடன் கைகோர்த்த நாசா!

 

ஹலோ விக்ரம், திஸ் இஸ் நாசா, நாங்க பேசுறது கேக்குதா? இஸ்ரோவுடன் கைகோர்த்த நாசா!

இஸ்ரோவின் ஒப்புதலுடன், நீண்டதூர விண்வெளி தொடர்பு ஆண்ட்டெனாக்கள்மூலம், விக்ரமுக்கு ஹலோ மெசேஜ் அனுப்பி இருக்கிறது நாசா. செப்டம்பர் 20 – 21 தேதிகளுக்கிடையே விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் செலவு செய்து, 99% வெற்றிபெற்ற சந்திராயன் -2 திட்டத்திற்கு திருஷ்டி விழுந்ததபோல், விக்ரம் லேண்டரை மட்டும் சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. புதுப்பேட்டை படத்தில் தனிமைச் சிறையில் அடைபட்டு, எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து நிகழலாம் என்ற பயத்துடன் தனக்குத்தானே பேசிக்கொள்வார் தனுஷ். நிலவின் தென்துருவத்தில் சாய்ந்த நிலையில் தன்னந்தனியாய், இன்னும் 10 நாட்களுக்குள் சிக்னல் கிடைக்கப்பெறவேண்டும் என்ற டெட்லைனுடன் கிடக்கும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியும் கிட்டத்தட்ட அந்த திக்திக் நிலைமையில்தான். விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிக்கு, அமெரிக்காவின் நாசாவும் உதவ முன்வந்துள்ளது.
 

Deep Space Network Antennas

இஸ்ரோவின் ஒப்புதலுடன், நீண்டதூர விண்வெளி தொடர்பு ஆண்ட்டெனாக்கள்மூலம், விக்ரமுக்கு ஹலோ மெசேஜ் அனுப்பி இருக்கிறது நாசா. செப்டம்பர் 20 – 21 தேதிகளுக்கிடையே விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆண்டெனாக்காள்மூலம் அனுப்பப்படும் மெசேஜ், நிலவில் இருந்து எதிரொலிக்கப்பட்டு அந்த அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். விக்ரம் லேண்டருடன் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் தொடர்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதும், அதன்பின் லேண்டரின் சூரிய மின் தகடுகளை செயல்படவைக்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது!