ஹரே பிக் பாஸ்… கலக்கல் நடனத்துடன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா

 

ஹரே பிக் பாஸ்… கலக்கல் நடனத்துடன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

aiswarya

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து 11 பேர் வெளியேறியுள்ளனர். இன்னும் 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதனால் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் பிக் பாஸ் 2வது  சீசன் போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை புரிந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ்  2வது சீசனில்  மக்கள் மனம்கவர்ந்த போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா  வருகிறார். வரும் போதே உற்சாகமாக நடனம் ஆடிய படி வரும் அவரை கண்டு ஹவுஸ்மேட்ஸ் திகைத்துப் போய் நிற்கின்றனர். அப்போது ஹரே பிக் பாஸ் என்று கூச்சல் போடும் ஐஸ்வர்யா,  ஹவுஸ்மேட்ஸிடம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என்கிட்ட 5 படம் இருக்கு ‘  என்று கூறுகிறார். மேலும் அவர் படத்தின் போஸ்டரும் வெளியிடும்  படி புரொமோ  வீடியோ முடிகிறது. 

முன்னதாக மகத் – யாஷிகா, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது