ஹரிஷ் கல்யாணுடன் ரொமான்ஸ் செய்யும் தடம் பட நாயகி! 

 

ஹரிஷ் கல்யாணுடன் ரொமான்ஸ் செய்யும் தடம் பட நாயகி! 

தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகத்  தடம் பட நாயகி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகத்  தடம் பட நாயகி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘விக்கி டோனார்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

தாராள பிரபு என்று பெயரிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார். அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணும், யாமி கவுதம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி பார்த்துத்திருந்தோம். 

இந்த நிலையில் தற்போது இதில் யாமி கவுதம் கதாபாத்திரத்தில் நடிகை தான்யா ஹோப் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான தடம் படத்தில் அருண் விஜக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.