ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை! 

 

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை! 

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுசு ராசி நேயர்களே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார். 

harish kalyan

இப்படத்தில் மெக்கானிக்காக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக 2018-ல் ‘ஜலேபி’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. மேலும் இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!