ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த தளபதி 63 பட நடிகை 

 

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த தளபதி 63 பட நடிகை 

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும்  தனுசு ராசி நேயர்களே படத்தில்  மற்றொரு நாயகியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வரும் ரெபா மோனிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும்  தனுசு ராசி நேயர்களே படத்தில்  மற்றொரு நாயகியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வரும் ரெபா மோனிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மெக்கானிக்காக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

harish kalayan

இந்நிலையில் இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இதில் முக்கிய மற்றொரு வேடத்தில் நடிகை ரெபா மோனிகா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

reba monica

மேலும் நடிகை ரெபா மோனிகா தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் மகளிர் கால்பந்து அணியில் ஒருவராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.