ஹன்சிகாவை தொடர்ந்து ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட மேகா ஆகாஷ்

 

ஹன்சிகாவை தொடர்ந்து ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட மேகா ஆகாஷ்

நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

சென்னை: நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கு என ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் ஏற்கனவே உருவான  பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தெலுங்கில் நடித்துள்ள இவர் எப்போதும் சமூக வலைத்தளப் பக்கத்தில் படு சுறுசுறுப்பாக காணப்படுவர்.

இந்நிலையில், தற்போது ஹன்சிகாவை தொடர்ந்து மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்து ரஷ்ய டிஜே டம்லா என்று பெயரை மாற்றியுள்ளனர். மேலும் மேகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு டம்லாவின் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளனர்.

megha aakash

அதை தொடர்ந்து அவர் அப்புகைப்படங்களை நீக்கிவிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் “தன் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து அதில் உள்ளவற்றைக் கண்டுகொள்ள வேண்டாம். கணக்கை திரும்பப் பெறும் முயற்சியில் என் குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் மீட்கப்படும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.