ஹனிமூனுக்கு பிறகும் காதலை உயிர்ப்பாக வைத்திருக்க 5 வழிகள்

 

ஹனிமூனுக்கு பிறகும் காதலை உயிர்ப்பாக வைத்திருக்க 5 வழிகள்

காதலை உயிர்ப்பாக வைத்திருக்க வழிகள் உள்ளன. அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

காதலிக்கும்போதும் சரி, திருமணத்திற்கு முன் துணையுடன் செலவழிக்கும் காலத்திலும் சரி அந்த ரிலேஷன்ஷிப் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவரை ஒருவர் வசீகரிக்க நிறைய பிரயத்தனப்படுவார்கள். வாழ்க்கையே பிரகாசமாக, பாஸிடிவாக தோன்றும். இந்த காலத்தை ஹனிமூன் காலம் என்பார்கள்.

ஆனால், எந்தவொரு ரிலேஷன்ஷிப்பும் நாளாக நாளாக டல்லடிக்க தொடங்கும். இணைகளின் முன்னுரிமைகள் வேறாகி போகும். ஆனால் தொடர்ந்து காதலை உயிர்ப்பாக வைத்திருக்க வழிகள் உள்ளன. அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

ttn

கட்டிக்கோ…கட்டிக்கோ!

ஒரு ரிலேஷன்ஷிப்பில் அழகான விஷயமே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்வது தான். மேலும் நன்றாக பேசத் தெரியவதர்களுக்கும் இந்த கட்டிப்பிடி வைத்தியம் மிகுந்த உதவியாக இருக்கும். வெளியிடங்களில் இருக்கும்போது வெளிப்படையாக அன்பை காட்டும் வகையில் அணைத்துக் கொள்வது அல்லது தொடுவது போன்ற சின்ன, சின்ன செயல்கள் நீண்ட கால உறவுகளை உருவாக்க உதவியாக இருக்கும்.

ttn

டேட்டிங் ரொம்ப முக்கியம்

ரிலேஷன்ஷிப்பின் தொடக்கத்தில் அடிக்கடி சந்திப்புகள், வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருவது போன்ற பல விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட பிறகு இவை காணாமல் போகும். எனவே முன்பு போல அடிக்கடி தியேட்டர் செல்வது, படம் பார்க்கும்போது ஒருவர் கையை மற்றொருவர் இணைத்துக் கொள்வது, பார்க்குக்கு போவது, கடற்கரை சென்று வருவது, பேசிக் கொண்டே நீண்ட தூரம் ஒன்றாக நடந்து செல்வது போன்ற காரியங்களை தொடர்ந்தால் வாழ்வில் காதல் இனிக்கும்.

ttn

வெளிப்படை அவசியம்

துணையிடம் நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது குறிப்பாக நம்முடைய உணர்வுகளை. அதனால் நம் உணர்வுகளை துணை நன்கு புரிந்து கொண்டு, நம்முயடைய தேவைகளை தெரிந்து கொள்வார். மேலும் நம் வாழ்க்கைத் துணை நமக்கு எந்தளவு முக்கியமானவர் என்பது அவருக்கு தெரிய வரும். துணையின் ஆடை அல்லது அழகை பற்றி வெளிப்படையாக பாராட்டுவது அருமையான மாற்றங்களை உண்டாக்கும்.

ttn

பியூட்டி…பியூட்டி

மேக்கப்பை விரும்பாமல் இயல்பான அழகை நாம் விரும்புபவராக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அழகாக இருப்பதும், நம்மை பராமரித்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். இதனால் நம் நம்பிக்கை அதிகமாவதோடு, ரிலேஷன்ஷிப் காதலோடு நீடித்து இருக்கவும் உதவும். எனவே ஆண்கள் சலூனுக்கு சென்று வருவது அல்லது ஜிம் போய் கட்டுடல் பெறுவது, பெண்கள் பியூட்டி பார்லர் போவது அல்லது மசாஜ் செய்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம். நாம் அமைதியாக, ரிலாக்ஸாக இருக்கும்போது ரிலேஷன்ஷிப்பும் அவ்வாறே அமையும்.

ttn

ஆதரவாக இருத்தல்

ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் நல்லது, கெட்டது அல்லது சிறப்பான விஷயங்கள் நடக்கலாம். இருவரும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். சரியான முடிவெடுக்க ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க வேண்டும். ஒருவரின் சிக்கலை மற்றொருவர் காது கொடுத்து கேட்க வேண்டும். ஒருவரின் சாதனை பெரிதோ, சிறிதோ அதை மனமார பாராட்ட வேண்டும். எல்லாமே முக்கியவை தான்.

இவ்வாறு காதலை உயிர்ப்பாக வைத்திருக்க முயற்சிகள் எடுப்பது வாழ்வின் சிறப்பான ஒரு காரியமாக இருக்கலாம். எனவே இன்றே தொடங்குங்கள் மற்றும் தொடருங்கள்!