ஸ்வைப் டூ ரிப்ளை…பிஸ்கட் ஸ்டிக்கர் பேக்; வாட்ஸ் ஆப்-ன் 5 புதிய அம்சங்கள்

 

ஸ்வைப் டூ ரிப்ளை…பிஸ்கட் ஸ்டிக்கர் பேக்; வாட்ஸ் ஆப்-ன் 5 புதிய அம்சங்கள்

ஸ்வைப் டூ ரிப்ளை, பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் உள்ளிட்ட ஐந்து புதிய அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை தாண்டி, மெசேஜ் செயலியான வாட்ஸ் ஆப் இன்றைய இளைஞர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். 

பயனாளர்களை தொடர்ந்து கவரும் வகையில், வாட்ஸ் ஆப் நிறுவனமும், ஸ்டேட்டஸ் வசதி, பணப்பரிவர்த்தனை வசதி, மெசேஜ் டெலிட் வசதி என தொடர்ந்து ஒவ்வொன்றாக அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், ஐந்து புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

WhatsApp ‘Swipe to Reply’ feature:

தற்போது குறிப்பிட்ட செய்தியின் மீது நீண்ட நேரம் விரலை வைத்து அழுத்துவதன் மூலமே ரிப்ளை வசதியை வாட்ஸ் ஆப்-ல் பெற முடியும். ஆனால், ஸ்வைப் டூ ரிப்ளை மூலம் ரிப்ளை செய்யவேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக நகர்த்தினால் ரிப்ளைக்கான வசதி வரும். ஸ்வைப் டூ ரிப்ளை வசதி ஏற்கெனவே வாட்ஸ் ஆப் iOS-ல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் 2.18.300-ல் சோதனையில் உள்ளது. கூடிய விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாலர்களுகும் இந்த வசதி அறிமுகமாகவுள்ளது.

WhatsApp Picture-in-Picture mode:

பிக்சர் இன் பிக்சர் மோட் (picture-in-picture mode) என்பது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபின் வீடியோ லிங் உங்களுக்கு அனுப்பப்பட்டால், அந்த வீடியோவை வாட்ஸ் ஆப்-லிலேயே சிறிய திரையில் காணலாம். தற்போது வாட்ஸ் ஆப் iOS-ல் பயன்பாட்டில் உள்ள இந்த வசதி, ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது.

WhatsApp ‘Biscuit’ sticker pack”:

வாட்ஸ் ஆப் தனக்கென தனி இமோஜிக்களையும், ஸ்டிக்கர்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்டிக்கர் பேக் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு “பிஸ்கட்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய “பிஸ்கட் ஸ்டிக்கர் பேக்” விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

WhatsApp ads for Status:

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரம் ஓடும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டோரீஸ் போன்று இருக்கும் என தெரிகிறது. வாட்ஸ் ஆப் iOS வெர்சனில் மட்டும் இதனை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள் எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp inline image notifications:

வாஸ்ட் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியே இந்த இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் ஆகும். இந்த வசதி புகைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜிஃப் மற்றும் வீடியோக்களுக்கு பொருந்தாது. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் (inline image notifications) ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் 2.18.291-ல் தற்போது சோதனையில் உள்ளது.