ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் காய்கறி, பழங்கள் டெலிவரி செய்ய ஏற்பாடு!

 

ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் காய்கறி, பழங்கள் டெலிவரி செய்ய ஏற்பாடு!

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருப்பினும், மக்கள் வெளியே சென்று வாங்குவதில் பல பிரச்னைகள் இருக்கின்றன.

கொரோனா வைரஸின் கோரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஒரே வழி, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது தான். அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

ttn

ஆனால், மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருப்பினும், மக்கள் வெளியே சென்று வாங்குவதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆன்லைன் மூலம் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைனில் உணவு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் சென்னையில் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர்களின் செயலர் தெரிவித்திருக்கிறார். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் அதே விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் 16 காய்கறிகள் மற்றும் 5 பழங்கள் கொண்ட தொகுப்பை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.