ஸ்விகி பெயரில் நடக்கும் மோசடி: ஏமாறாதீங்க மக்களே!?

 

ஸ்விகி பெயரில் நடக்கும் மோசடி: ஏமாறாதீங்க மக்களே!?

 ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இரு சக்கர வாகனம், செல்போன்களை பறித்துக் கொண்டு மோசடி செய்த  சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை : ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இரு சக்கர வாகனம், செல்போன்களை பறித்துக் கொண்டு மோசடி செய்த  சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது.

swigyy

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் பிரசாத், தங்க நகை செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த ஷங்கர் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஷங்கர் பிரசாத்திடம் எதற்காக நெருப்பில் கஷ்டப்படுகிறீர்கள்? நான் பேசாமல் ஸ்விகியில்   இணைந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

swiggy

இதை நம்பிய பிரசாத், 80 ஆயிரம் விலையில் 4 இரு சக்கர வாகனங்களும், 2 லட்சம் மதிப்பில் 6 ஆண்ட்ராய்டு செல்போன்களும் வாங்கி சங்கரிடம் கொடுத்துள்ளார். மேலும் முன் பதிவு தொகையாக  ரூபாய்  84 ஆயிரத்தையும் அளித்துள்ளார். பிரசாத்திடம் ஸ்விகி நிறுவனத்தின் மேலாளர் என ஒருவரை அறிமுகப்படுத்திய ஷங்கர் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது பிரசாத்துக்கு தெரிய வந்தது. 

swiiggy

 மற்ற உணவு நிறுவனங்களின் பெயர்களைக் கூறியும் இதே போன்று மோசடி வேலைகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.