ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை! மீறினால் நடவடிக்கை

 

ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை! மீறினால் நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவுதலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி நாளை மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் தவிர்த்து எந்த கடைகளும் திறக்கக் கூடாது. 

swiggy

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் இந்திய தண்டனைச் சட்டம் 108ன் படி தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.