ஸ்வச் பாரத்னா இப்பிடித்தான் இருக்கணும், வழிகாட்டும் குவஹாத்தி!

 

ஸ்வச் பாரத்னா இப்பிடித்தான் இருக்கணும், வழிகாட்டும் குவஹாத்தி!

குவஹாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக கழிவறைகளை பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த மாநகராட்சியாக குவஹாத்தியை மாற்ற முன்வந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

ஸ்வச் பாரத் நல்ல திட்டம். ஆனால் ஸ்வச் பாரத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிவறைகளுக்கு செலவான தொகையைவிடவும், அந்த திட்டத்தை விளம்பரப்படுத்த ஆன செலவு கூடுதலாக போகும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. விளம்பர செலவை குறைத்து அதற்குப்பதிலாக தெருவுக்கு தெரு சுத்தமான கழிப்பறைகளையும், குப்பைத்தொட்டிகளையும் வைத்தால், குப்பை எப்படி சேரும்? குப்பை இல்லா இடத்தில் குப்பையை கொட்டி, அதன்பின் பெருக்கி, அதனை வீடியோவாக்கி விளம்பரம் தேடும்போது கடுப்பு வருமா வராதா? மான் கி பாத்தில் மார்தட்டிகொள்வதற்காக காகிதத்தில் மட்டும் இருக்கும் திட்டங்களால் என்ன பயன்? ஆனால், குவஹாத்தி மாநகராட்சி ஆத்மார்த்தமாக இந்த பிரச்னையை கையாள முன்வந்துள்ளது.

Guwahati Municipal Corporation

இனி குவஹாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக கழிவறைகளை பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த மாநகராட்சியாக குவஹாத்தியை மாற்ற முன்வந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இம்முடிவை  அமல்படுத்தாத  ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நட்சத்திர ஹோட்டலுக்கும் இந்த முடிவு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.