ஸ்ரீ ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் சேலம் தண்ணிக்குழம்பும் பிச்சுப்போட்ட கோழியும்.

 

ஸ்ரீ ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் சேலம் தண்ணிக்குழம்பும் பிச்சுப்போட்ட கோழியும்.

சேலம் ,செவ்வாய்ப் பேட்டை வெங்கடப்பன் தெருவில் இருக்கிறது இந்த உணவகம்.

சேலம் ,செவ்வாய்ப் பேட்டை வெங்கடப்பன் தெருவில் இருக்கிறது இந்த உணவகம்.1979ம் ஆண்டு நாராயண சாமி என்பவரால் துவங்கப்பட்ட இந்த உணவகத்தை இப்போது அவரது மகன் சுதாகரன் நடத்தி வருகிறார்.
சில்லிச் சிக்கன் தவிர எதற்கும் நிறமூட்டிகளைப் பயன்படுத்துவது இல்லை.எல்லா மசாலாக்களும் இவர்களின் சொந்த தயாரிப்பு மட்டுமே.மதியம் ஒரு வேளை மட்டுமே இயங்குகிறது. 12 மணிக்கு துவங்கி 3 மணிவரை போகலாம் சாப்பாடு, பிரியாணி இரண்டும் உண்டு.

salem

அன்லிமிட்டட் சாப்பாடு 85 ரூபாய்.அத்துடன் சங்கரா அல்லது பாறை மீன் குழம்பு,காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு,சூப்பு அல்லது ரசம் போன்ற மிதமான அகரத்தோடு சிக்கன் தண்ணிக்குழம்பு,தக்காளி ரசம், மோர் தருகிறார்கள்.இங்கே இரண்டு சைட் டிஷ்கள் மிகவும் பிரபலம்.முதலிடம் பெறுவது பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி.நிறைய மிளகு சேர்த்து கருக ஃபிரை செய்து தருகிறார்கள்.விலை (210) கொஞ்சம் கூடத்தான்.ஆனால் அது தரும் சுவை உங்கள் மனதைத் தேற்றிவிடும். இவர்கள் பண்ணை கோழிகளை வாங்குவது இல்லை.அக்கம் பக்கத்தில் நடக்கும் வாரச்சந்தைகளில் கிராம மக்கள் கொண்டு வந்து விற்கும் வீட்டில் வளர்த்த கோழிகளையே வாங்குகின்றனர்.

salm

அடுத்தது,ஆசாரி வறுவல், ( ரூ 180 ) காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப்போட்டு வேறு மசாலாக்கள் இல்லாமல் செய்வதால் அசல் நாட்டுக்கோழி சுவையை காரசாரமாக அனுபவிக்கலாம்.நாம் ஆர்டர் செய்த பிறகுதான் செய்யப்படுவதால் முதலிலேயே சொல்லிவிட்டால் காரம் குறைவாகவும் செய்து தருகிறார்கள். அடுத்தது பிராய்லர் கோழியில் செய்த, நிறைய தேங்காய் துணுக்குகள் சேர்த்த பள்ளிப்பாளையம் சிக்கன் ( ரூ 170).செமி கிரேவியாக தேங்காய் மணத்துடன் கிடைக்கிறது. மட்டந் சுக்காவும் உண்டு.சாப்பாடு தவிர சேலத்துக்கே உரிய தனித்த சுவை கொண்ட பிரியாணியும் தருகிறார்கள். விலை கொஞ்சம் பர்சை பதம்பார்க்கிறது என்றாலும் சுவையும் வயிற்றைக் கெடுக்காத பக்குவமும் உங்களை அடுத்த முறையும் செவ்வாய் பேட்டை வெங்கடப்பன் தெருவுக்கு இழுக்கும் என்பது உறுதி.