ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடை பெற்ற போர்வை சாற்றும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பல்வேறு சிறப்புகளை கொண்ட தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விளங்குகிறது.

andaal

இக்கோயிலில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி என்று அழைக்கப்படும் கைசிக ஏகாதசியை முன்னிட்டு நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு முன்அறிவிக்கும் வண்ணமும் ஆண்டாள் கோயிலில் தெய்வங்களுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

andaal

இதே போல் இந்த ஆண்டுக்கான 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி கைசிக ஏகாதசி தினத்தன்று அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி ஏகாதசி தினத்தின் முன்தினம் இரவு 11 :00 மணிக்கு கோபாலாவிசாலத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். 

அப்போது 108 போர்வைகளை சாற்றி சதீஷ் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். பாலமுகுந்தனின் அரையர் சேவை நடைபெற்றது. அதன்பின்னர் வேதபிரான் சுதர்சனன் கைசிகபுராணம் வாசித்தார்.இந்த வைபவத்தின் போது பகல் பத்து மண்டபத்தில் கருடாழ்வார் எழுந்தருளினார்.

aandaal

இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.