ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் . இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.  லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது .

srirangam

 மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247  பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும்.  

கவிசக்கரவர்த்தி கம்பர்,கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் என்பது வரலாற்று கூற்று ஆகும்.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

srirangam2

டிசம்பர் 17-ந் தேதி மோகினி அலங்காரம், 18-ந் தேதி அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி, 27-ந் தேதி தீர்த்தவாரி, 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

srirangam6

இதேபோல் வெள்ளை கோபுரம் அருகிலும் விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைகுண்ட ஏகாதசி விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து செய்து வருகின்றனர்.