ஸ்ரீமுனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் கலந்துகொண்ட பிரியாணி திருவிழா…150 கிடாய்கள், 300 கோழிகளுடன் விருந்து!

 

ஸ்ரீமுனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் கலந்துகொண்ட பிரியாணி திருவிழா…150 கிடாய்கள், 300 கோழிகளுடன் விருந்து!

ஆண்டுதோறும்   தைமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை  பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

மதுரை ஸ்ரீ முனியாண்டிசுவாமி கோவில் பலருக்கும் அறியப்பட்ட கோவிலாகும். திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில்அமைந்துள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும்   தைமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை  பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

ttn

இந்நிலையில் இந்தாண்டு 85 ஆவது பிரியாணி திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த பிரியாணி திருவிழாவில்  தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள்  மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

ttn

இதற்காக பக்தர்கள் பலர் விரதம் இருந்து காப்பு கட்டி சாமியை வழிபட்டு விட்டு சென்றனர். மேலும் பலர் பால்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ததுடன் பூஜைகளும் செய்தனர். இதையடுத்து 150 கிடாய்கள், 300 கோழிகள் வெட்டப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.