ஸ்ரீதேவி மகளின் ஆடை சர்ச்சை: பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த சோனம் கபூர்!?

 

ஸ்ரீதேவி மகளின் ஆடை சர்ச்சை: பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த சோனம் கபூர்!?

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அணிந்து வரும் உடைகளைப் பார்த்துக் கவலைப்படுகிறேன் என்று நடிகை கத்ரினா கைஃப் விமர்சித்துள்ளார். 

மும்பை:  ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அணிந்து வரும் உடைகளைப் பார்த்துக் கவலைப்படுகிறேன் என்று நடிகை கத்ரினா கைஃப் விமர்சித்துள்ளார். 

janvi

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. தற்போது அவர் விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார். கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். சமீபகாலமாக ஜான்விகபூர் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வருவதாகப் பரவலாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

katrrina

இதையடுத்து நடிகை கத்ரினா கைஃப் சமீபத்தில் கொடுத்த பேட்டியின் போது, ஜிம்-க்கு போகும் நடிகைகளில் யார் சரியாக உடை அணிவதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ஜான்வி கபூர் பெயரைக் கூறிய அவர், ஜான்வி கபூர் அணிந்து வரும் உடைகளைப் பார்த்துக் கவலைப்படுகிறேன்’ என்று விமர்சனம் செய்துள்ளார். இந்த கருத்தானது தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக  உள்ளது.

sonam

இந்நிலையில்,  இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஜான்வி கபூரின் உறவினரும் நடிகையுமான சோனம் கபூர், ஜான்வி எந்த உடை அணிந்தாலும் சிறப்பாக இருப்பாள் என்று குறிப்பிட்டுள்ளார். 

sonam

முன்னதாக  இதுகுறித்து அனைதா ஷ்ரூப் அட்ஜனியா நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஜான்வி, தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவு நான் இன்னும் சம்பாதிக்கவில்லை.என் தொழில் குறித்து விமர்சித்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு என்ன தவறு எனப் பார்ப்பேன். ஆனால் நான் ஜிம்மில் இருந்து வரும்போது என்ன ஆடை அணிந்திருந்தால் இவர்களுக்கு என்ன என்று காட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.