ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்

 

ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்

இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை அஜித் நிறைவேற்றி விட்டதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

சென்னை: இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை அஜித் நிறைவேற்றி விட்டதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அஜித் மற்றும் ஸ்ரீதேவி முதல்முறையாக இணைந்து நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலிஷ். இதில் அஜித் ஒரு சில நிமிடமே தோன்றியிருப்பார். இந்த படத்தில் நடித்தபோது, ஸ்ரீதேவிக்கு தமிழில் ஒரு படத்தை தயாரித்து அதில் அஜித்தை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதை தன் கணவர் போனி கபூரிடமும், அஜித்திடமும் கூறியுள்ளார். அதற்கு அஜித், நிச்சயமாக நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். ஆனால் திடீரென ஸ்ரீதேவி இறந்துவிட்டார், எனினும் அஜித் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக போனி கபூரை குடும்பத்தை தயாரிக்க அழைத்திருக்கிறார்.

இதுகுறித்து போனி கபூர், அஜித் சொன்னது போலவே எங்களை தமிழில் தயாரிக்க அழைத்தார். தற்போதுள்ள சூழலில் சமூக பொறுப்புடன் கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘பின்க்’ படத்தை தேர்வு செய்தோம். எங்களுக்கும் அஜித்துக்குமான நட்பு இதோடு முடிந்துவிடாது, இனியும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.