ஸ்மித் அபார சதம்.. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு!ஸ்மித் அபார சதம்.. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு!

 

ஸ்மித் அபார சதம்.. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு!ஸ்மித் அபார சதம்.. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு!

3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து, களமிறங்கிய வார்னர் – பின்ச் அதிரடி ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு துவக்கத்தில் சற்று திணறியது. வார்னர் 3 ரன்களுக்கு சமி பந்தில் ஆட்டமிழந்தார். பின்ச் 19 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறியதால், நல்ல துவக்கம் கிடைக்காமல் ஆஸி., அணி தடுமாற்றம் கண்டது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் – லபுசானே இருவரும் இரண்டாவது போட்டியை போலவே நிதானமாக ஆடி கணிசமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டவாறு பந்துவீசினர்.

ஸ்மித் இந்த போட்டியிலும் எளிதாக அரைசதம் கண்டார். மறுமுனையில் இவருடன் சேர்ந்து நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லபுசானே அரைசதம் அடித்தார். ஆனால், அதன்பிறகு இவரால் நீடித்து நிலைக்க முடியவில்லை. 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். 

#INDvAUS

இந்திய அணிக்கு அபாயகரமாக திகழ்ந்து வந்த ஸ்மித் 117 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசிய ஸ்மித் 132 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் 14 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் அடித்திருந்தார். கீப்பர் அலெக்ஸ் கேரி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற ஆஸி., அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. முகமது சமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ராஹ் சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.