ஸ்மார்ட் போன் விற்பனையின் புதிய உச்சத்தை எட்டிய சாம்சங் நிறுவனம்!! 2 மாதங்களில் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா??

ஸ்மார்ட் போன் விற்பனையின் புதிய உச்சத்தை எட்டிய சாம்சங் நிறுவனம்!! 2 மாதங்களில் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா??

சாம்சங் நிறுவனம் கடந்த 2 மாதத்தில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அதன் மூலம் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த 2 மாதத்தில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அதன் மூலம் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

samsung a50

இந்திய தொழில்நுட்ப பங்குச் சந்தையில் சாம்சங் மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி இரண்டிற்கும் இடையே விற்பனையில் கடும் போட்டி நிகழ்ந்துவருகிறது. குறிப்பாக, கடந்த வருடம் ஜியோமி விற்பனையில் முதலிடம் பிடித்தது அதனை தற்போது முறியடிக்கும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை பங்குச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ வகையில் மட்டுமே 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளதாக சாம்சங் இந்தியாவின் துணைத்தலைவர் ரஞ்சீவ்ஜித் சிங் தெரிவித்தார். கேலக்ஸி ஏ வகையில் மொத்தம் ஆறு விதமான ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் புதுப்புது கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட்போன்கள் பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பினையும் ரஞ்சீவ்ஜித் சிங் வெளியிட்டார்.

samsung a50

இந்த கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட்போன்களின் மூலம் பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை உள்ள 70 நாட்களில் மொத்தம் 100 கோடி அமெரிக்க டாலர்கள்; அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி உள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்தார். அதேபோல், இவ்வருட இறுதிக்குள் 28,000 கோடி வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.