‘ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ : அலைமோதும் கூட்டம்!

 

‘ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ : அலைமோதும் கூட்டம்!

இதன் எதிரொலியாகத்  தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. வெங்காய விளைச்சலில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்  பெய்த கனமழையால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகத்  தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ttn

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில் ஒரு வினோத அறிவிப்பு ஒன்று  அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

phone

இந்த அறிவிப்புக்குப் பிறகு கடையில் கூட்டம் அலைமோதுவதாக அக்கடையின்  உரிமையாளர் தெரிவித்துள்ளார்