ஸ்மார்ட்போன் யுத்தம்; இருட்டினில் கிளிக் சத்தத்துடன் சண்டையிடும் புகைப்படங்கள்!

 

ஸ்மார்ட்போன் யுத்தம்; இருட்டினில் கிளிக் சத்தத்துடன் சண்டையிடும் புகைப்படங்கள்!

செல்போனை பகல் நேரங்களை விட இரவு தூங்கப் போகும் முன் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது மனதிற்கு சந்தோஷம் தந்தாலும் மூளையைப் பாதித்து விடும் அபாயம் உள்ளது

ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அன்றைய நாள் ஒரு யுகம் போன்று நகர்வதாகவே நம்மில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். அந்த அளவுக்கு செல்போன் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இனைந்து விட்டதால், புது புது அம்சங்களை தங்களது போனில் கொடுக்கவும் ஸ்மார்ட்போன் உற்பதியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

moon

தற்பொழுது செல்போனை பகல் நேரங்களை விட இரவு தூங்கப் போகும் முன் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது மனதிற்கு சந்தோஷம் தந்தாலும் மூளையைப் பாதித்து விடும் அபாயம் உள்ளது. எனினும், ஸ்மார்ட்போன் யுத்தம், தற்போது இரவு நேரங்களை மையப்படுத்தி சண்டையிட துவங்கியுள்ளது.

huawei p30 pro

ஸ்மார்ட்போன் என்றதுமே, அனைவரும் முதலில் பார்ப்பது அதனுடைய கேமிராவை தான். மூன்று, நான்கு, ஐந்து லென்சுகளுடன் ஸ்மார்ட்போன்களில் அதனுடைய கேமிராக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பகல் நேரங்களில் தெளிவான புகைப்படங்கள் எடுப்பதில் நிலவிய ஸ்மார்ட்போன் சந்தையில் நடந்த போர், தற்போது இரவை நோக்கி செல்கிறது.

huawei p30 pro

குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியமாக எடுக்கும் நைட் சைட் (Night Sight) எனும் அம்சத்தை கூகுள் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. புகைப்படங்களை எடுப்பதற்கு பெயர் போன, அதனுடைய Pixel போன்களில் கடந்த 2018-ஆம் ஆண்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

huawei p30 pro

அமாவாசை இரவில் எடுக்கும் படங்களை கூட பங்குனி வெயிலில் பிரகாசமாக எடுப்பதை போன்று காட்டுவது தான் இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம். ஒன்பிளஸ் 6t போன்ற வேறு பல செல்போன்கள், கூகுளின் கேமிரா ஆஃப்-ன் APK File மூலம் பயன்படுத்தினாலும், உள்ளபடியே Pixel பிரத்யேக அம்சமாக உள்ளது. தொடர்ந்து, சாம்சங் அதனுடைய கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனில் பிரகாசமான இரவு (Bright Night) எனும் குறைந்த வெளிச்சத்தில் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் அம்சத்தை கொண்டு வந்தது.

huawei p30 pro

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஹூவாய் தன்னுடைய p30 ப்ரோ எனும் ஸ்மார்ட்போன் மாடலில் குறைந்த வெளிச்சத்தில் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவுக்கு இந்த போனில் குறைவான வெளிச்சத்தில் துல்லியமாக புகைப்படங்கள் எடுக்கலாம் எனவும், நைட் மோட் என்பது ஹூவாய் p30 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள புதுமையான அம்சங்களில் ஒன்று தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

huawei p30 pro

6.47-இன்ச் ஒஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்ஸல்) டிஸ்ப்ளே, 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி, ஹைசிலிகான் கிரிண் 980, டூயல் கார்டெக்ஸ்- ஏ76 2.6ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட், 40எம்பி ஹூவாய் சூப்பர் ஸ்பெக்ட்ரம் சென்சார் + 20எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் + 8 எம்பி ஆப்டிகல் பெரிஸ்கோப்-ஜூம் கொண்ட பிரைமரி கேமிரா, 32 எம்பி செல்பி கேமிரா, 4200 mah பேட்டரி உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளது.

இதையும் வாசிங்க

உலகின் முதல் 5ஜி செல்போன் தென்கொரியாவில் அறிமுகம்!