ஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு – உள்நாட்டில் ரூ.987 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

 

ஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு – உள்நாட்டில் ரூ.987 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

ஸ்பைஸ்ஜெட் விமானம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விலைக் குறைப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விலைக் குறைப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. மக்களது இந்த ஆசையை தூண்டும் விதமாக விமான நிறுவனங்களும் அவ்வப்போது மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து சலுகை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் அதிரடியாக விலைக்குறைப்பு செய்துள்ளது.

ttn

அதன்படி ரூ.987 கட்டணத்தில் உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ளலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 15-ஆம் தேதிக்குள் இந்த விலையில் உள்நாட்டில் பயணிப்பதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். மேலும் இந்த சலுகையை பயன்படுத்தி அடுத்தாண்டு பிப்ரவரி 2021 வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உள்நாட்டு விமான டிக்கெட் ரூ.987 எனவும், குறைந்தபட்ச வெளிநாட்டு விமான டிக்கெட் ரூ.3,699 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விமான டிக்கெட் கிடைக்கும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.