ஸ்பெயின் நாட்டு பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

 

ஸ்பெயின் நாட்டு பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸின் மனைவி பெகோனா கோம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸின் மனைவி பெகோனா கோம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 5839-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரம் கடந்துள்ளது. அதில் இதுவரை உலகில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

ttn

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸின் மனைவி பெகோனா கோம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு பிரதமரும் மற்றும் அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு இந்த நோயின் மையமாக ஐரோப்பா மாறியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.