ஸ்பெயின்: கொரோனா வைரஸ் இறப்புகள் குறைந்ததால் குழந்தைகள் தெருக்களில் நடமாட அனுமதி

 

ஸ்பெயின்: கொரோனா வைரஸ் இறப்புகள் குறைந்ததால் குழந்தைகள் தெருக்களில் நடமாட அனுமதி

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்புகள் குறைந்துள்ளதால் குழந்தைகள் தெருக்களில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்புகள் குறைந்துள்ளதால் குழந்தைகள் தெருக்களில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க மார்ச் மாதம் முதல் கொரோனா ஆதிக்கம் தொடர்ந்து வந்த நிலையில் ஆறு வாரங்களுக்கு பிறகு குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட முதல் நாடாக ஸ்பெயின் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்த தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை அந்நாட்டில் பதிவானது.

கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 288 பேர் கொரோனா நோயால் அந்நாட்டில் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 100 குறைவு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.

spain

மொத்தத்தில், கொரோனாவால் 23,190 பேர் ஸ்பெயினில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) சோதனை மூலம் மொத்தம் 207,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனையை ஸ்பெயின் நடத்தியுள்ளது.  மேலும் ஆயிரக்கணக்கானோரை வைரஸ் பாதித்திருப்பது ஆன்டிபாடி சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சகம் அந்த தரவை ஞாயிற்றுக்கிழமை வெளியிடவில்லை. மார்ச் 14-க்கு பிறகு கொரோனா தாக்கத்திலிருந்து சுதந்திரத்தின் முதல் சுவை பெறும் நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது. இது அந்நாடு முழுவதும் உள்ள பல குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாள். குழந்தைகள் வெளியில் செல்வதை தடைசெய்யப்பட்ட கட்டுப்பாடுகள் அந்நாட்டில் தளர்த்தப்பட்டுள்ளன.

இப்போது, ​​14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் தங்கள் வீடுகளின் 1 கி.மீ சுற்றளவில் சுற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் விளையாட்டு மைதானங்கள், பைக்குகள் அல்லது ஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் குழந்தைகள் இப்போது தங்கள் சுற்றுப்புறங்களுக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பிரதமர் சான்செஸ் கூறுகையில், கொரோனா நோயின் பரிணாமம் தொடர்ந்து மேம்பட்டு வந்தால் பெரியவர்களுக்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

கடந்த டிசம்பரில் சீனாவில் தோன்றிய பின்னர்,கொரோனா நோயானது குறைந்தது 185 நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பரவியுள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, இந்த தொற்றுநோய் உலகளவில் 203,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது, மொத்த நோய்த்தொற்றுகள் 2.9 மில்லியனைத் தாண்டியுள்ளன, அதே நேரத்தில் 822,700 நோயாளிகள் மீண்டுள்ளனர்.