ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது

 

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது.

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 16 லட்சத்து 99  ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

spain

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16081-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, அமெரிக்காவுக்கு அடுத்து 3-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 238-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 158,273 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 55,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.