ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

 

ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

பந்த்ரா-வோர்லி சீலிங்க் சாலையில் வேகமாக சென்றதற்காக நானே அபராதம் செலுத்தி இருக்கிறேன் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் 100 நாள் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை பிரித்தது அரசின் முக்கியமான சாதனையாகும்.

போக்குவரத்து விதிமீறல்

உடனடி முத்தலாக்கை குற்றமாக்கியது மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்தது போன்றவையும் மத்திய அரசு செய்த சில பெரிய சாதனைகளாகும். பந்த்ரா-வோர்லி சீலிங்கில் வேகமாக சென்றதால் நானே அபராதம் செலுத்தி உள்ளேன். மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

முத்தலாக் மசோதா நிறைவேற்றம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதம் மற்றும் சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வருவதை இலக்காக கொண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மோட்டார் வாகன திருத்த மசோதாவை நிறைவேற்றியது எங்க அரசின் மிகப்பெரிய சாதனையாகும். அதிக அபராதத்தால் வெளிப்படைதன்மை உருவாகும் மற்றும் ஊழலுக்கு இடம் இருக்காது. காஷ்மீரில் எனது துறை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் சுரங்கள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.