ஸ்டைல், மைலேஜ், டாப் என்ஜின் என அனைத்திலும் கலக்கும் மாருதி சுசூகி XL6..!! இந்தியாவில் அறிமுகம்

ஸ்டைல், மைலேஜ், டாப் என்ஜின் என அனைத்திலும் கலக்கும் மாருதி சுசூகி XL6..!! இந்தியாவில் அறிமுகம்

ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவில் XL6 என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இது இன்றைய தலைமுறை எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஆட்டோமொபைல் சந்தையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனத்தில் ஒன்றான மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 கிராஸ் ஓவர் ரக கார்களை இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த XL6 ரக  கார்கள் விலை கீழ் மாடல்களில் 9.96 லட்சம் ரூபாய் முதல் உயர்ரக மாடல்களில் 11.46 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலேயே. சந்தையில் மாற்றம் இருக்கலாம்.

மாருதி சுசூகி XL6 கார்களில் 6 சீட்கள் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2+2+2 என்கிற  லே-அவுட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.                                                                                               

முன்பக்க வடிவமைப்பில், பம்பர்களுடன் உறுதியான லைன்கள், அகலமான சென்ட்ரல் ஏர்டேம் மற்றும் தடிமனான பிளாக் கிளேடிங், புதிய பனிக்கால விளக்குகள் மற்றும் ஸ்கீட் பிளேட்கள் என அனைத்தும் புதிய தலைமுறையை கவரும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது.

பின் பக்கத்திலும், அதே இன்றைய தொழில்நுட்பத்துடன் நீளமான, ஸ்விப்ட்பேக் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் எர்டிகாவில் உள்ளது போன்றே இருந்தாலும், இதில் உள்ள பிளாக் இன்சர்ட்கள் இந்த காருக்கு ஸ்போர்ட்ஸ் வடிவத்தை கொடுக்கிறது. ரியர் பம்பர்கள் புதியதாகவும் சில்வர் ஸ்கீட் பிளேட்களுடன் கிளாம் குயிடேன்ட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.                                                                            உட்புற வடிவமைப்பில், பிரிமியம் ஸ்டோன் பினிஷ் மற்றும் ரிச் சில்வர் வேலைப்பாடுகளுடன் ஸ்விப்பின் கொண்ட கேபின்களாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, மாருதி சுசூகி XL6 ரக கார்களில் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு, ஸ்மார்ட் கனெக்டிவிட்டியும் உள்ளது கூடுதல் சிறப்பே.

பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக, டூயல் முன்புற ஏர்பேக்ஸ், இபிடி-களுடன் கூடிய ஏபிஎஸ், முன்புற சீட் பெல்ட்ல்குடன் ப்ரீ டென்சனர்களுடன் போர்ஸ் லிமிட்டர்கள், ISOFIX சைல்ட் சீட் ஆங்கரேஜ்கள், ஹை ஸ்பீட் வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான வசதிகள் அடங்கியிருக்கும்.

இந்த வகை கார்களில் 1.5 லிட்டர் K15 பெட்ரோல் மோட்டார்கள் மற்றும் அதில் SHVS என்ற  டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகை டெக்னாலஜிகள் சமீபத்தில் இன்றைய தலைமுறை எர்டிகா ரக கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.                                                                           பெட்ரோல் வகைகள் 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 5 ஸ்பீட் மெனுவல் கியரை கொண்டுள்ளன. K15 இன்ஜின்களில் பீக் எனர்ஜியாக 103 bhp எனர்ஜி 6,000 rpm-லும், பீக் டார்க்கில் 138 Nm-ல் 4,400 rpm-லும் இயங்கக்கூடியதாக இருக்கும்.