ஸ்டெர்லைட் விவாகரம்… தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? மு.க.ஸ்டாலின் கேள்வி

 

ஸ்டெர்லைட் விவாகரம்… தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக வேந்தாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த  தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.